ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம் நேற்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ள ஜனாதிபதி வழங்கிய நியமனங்களின் விபரம் கீழ்வருமாறு
தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்
கொழும்பு மாவட்டம்
மஹரகம – மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய பெரேரா
தெஹிவளை – சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை
கொழும்பு மேற்கு – மாகாணசபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மஹே
கொலன்னாவ – கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேசசபையின் தலைவர் பிரசன்ன குணசிங்க சோலங்கஆராச்சி
அவிசாவளை – சுமித் விஜயமுனி சொய்ஸா
கம்பஹா மாவட்டம்
மினுவாங்கொடை – ருவன் ரணதுங்க
மீரிஹம (இணைந்த) – சஞ்சய சிறீவர்த்தன
களுத்துறை மாவட்டம்
பாணந்துறை – அமைச்சர் மகிந்த சமரசிங்க
அகலவத்தை – மேல்மாகாண சபை அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச
களுத்துறை (இணைந்த) – மேல்மாகாண சபை அமைச்சர் சுமித் லால் மென்டிஸ்
மாத்தறை மாவட்டம்
மாத்தறை – தென்மாகாண சபை கல்வி அமைச்சர் சந்திம பெம்சித் ராஜபுத்ர
கண்டி மாவட்டம்
ஹேவாஹட்ட – அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க
செங்கடகல – மாகாண சபை அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன்
உடுநுவர – மத்திய மாகாண சபை உறுப்பினர் மானெல் பண்டார அபேரத்ன
கண்டி – மகிந்த அபேகோன்
அக்குரண – மொகமட் சம்சான்
திருகோணமலை
சேருவில – நளீன் குணவர்தன
மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
கொழும்பு மாவட்டம் – சுஜீவ சந்திரசிறி
கம்பஹா மாவட்டம் – அஞ்சு ஸ்ரீ ஷாம் பெரேரா
களுத்துறை மாவட்டம் – அசங்க எதிர்வீர
காலி மாவட்டம் – மாகாண சபை உறுப்பினர் சண்ண சாலிய மென்டிஸ் மற்றும் திசர குணசிங்க
மாத்தறை மாவட்டம் – பஸந் யாப்பா அபேவர்தன மற்றும் நளீன் ரணவீர