உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

Related Posts