வவுனியா, தரணிக்குளம் பகுதியில், வீட்டில் தனிமையில் இருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய இருவரை சனிக்கிழமை (27) வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிறுமியின் தாய் வேலைக்கென வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளதாகவும் தந்தை கூலி வேலை செய்பவர்; எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவ தினம் சிறுமியின் தந்தை, கூலி வேலைக்கென வெளியில் சென்றிருந்த வேளையிலேயே குறித்த சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள், 32, 21 வயதடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.