Ad Widget

மாணவி ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வவுனியா, உக்ககிளாங்குளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க தேவையான மூலக் கூறுகள் சாட்சியாக ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மாணவியின் கொலை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts