நாளைய தினம் திருநெல்வேலியில் ஹர்தால் அனுஷ்டிக்க கோரிக்கை

கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் நாளைய தினம் (24) ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரப்பட்டுள்ளது.

thirunelvely-Hartal

யாழ் திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபார நடவடிக்கை அனைத்தையும் முற்றாக நிறுத்தி ஹார்த்தால் இடம்பெற வேண்டும் என கோரிய துண்டு பிரசுரங்கள் இன்று திருநெல்வேலி சந்தையில் ஒட்டப்பட்டுள்ளன.

இதனை வியாபாரிகள் சங்கம் எற்பாடு செய்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை 16ம் திகதி 14 வயது சிறுமி ஒருவர் வீடு ஒன்றில் பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts