தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார். ஆனால் அவற்றை அவர் இன்று மறைக்கின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எமது கட்சிக்கு இது முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இவ்வாறு பல சந்தர்ப்பங்கள் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் காலத்திலிருந்தே மஹிந்த ராஜபக்ச குழுவினர் சுதந்தரக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திவந்துள்ளனர். எனினும் கட்சியை நாங்கள் பலப்படுத்தினோம். அதன் பின்னர் 17 வருடங்கள் இன்னல்களை அனுபவித்து பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றினோம்.
அவர்களிடம் உள்ள அனைவரும் கொலைகாரர்களே. ஆகவே எங்களுக்கே உயிராபத்து இருக்கின்றது தவிர கட்சிக்கு அல்ல – என்றார்.