யாழில் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழு!

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ். மாவட்டத்திற்கான மீண்டுமொரு அமர்வை ஏற்பாடு செய்து வருகின்றது.

இதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அடுத்தமாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் முறைப்பாடுகளை ஏற்பதற்கு இந்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஏற்கனவே ஒருமுறை நீடிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கடந்த 15ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் காலம் முடிவடைந்தது.

ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்குமாறு அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, கால எல்லையை எதிர்வரும் மே 15ஆம் திகதிவரை நீடிப்பதற்கான அனுமதியை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளது.

இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கான அடுத்தகட்ட அமர்வுகளை நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

Related Posts