சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன் படம் வருகிற மார்ச் 4-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடித்து வந்தபோதே சைத்தான் என்ற படத்திலும் நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது அந்த படத்தில் நடித்து முடித்து விட்டார்.
ஆனால் இரண்டு பாடல்கள் பேலன்ஸ் உள்ளதாம். அதனால் தற்போது அந்த பாடல்களை கம்போஸ் செய்து கொண்டிருக்கிறார். அடுத்த மாதத்தில் அந்த பாடல்கள் படமாக்கப்படுவதோடு மே மாதம் சைத்தான் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இதுவரை தனது சொந்த பேனரில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, முதல்முறையாக லைகா நிறுவனத்திற்காக எமன் படத்தில் நடிக்கிறார்.
ஏற்கனவே அவரை வைத்து நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். மேலும், வெளிக்கம்பெனி படம் என்றாலும் அந்த படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்துக்கொடுக்கிறாராம்.
அந்த வகையில், இந்த எமன் படம் 6 கோடி பட்ஜெட்டில் தயாராகிறதாம். இந்த படத்தின் வசூலைப் பொறுத்து விஜய் ஆண்டனி அடுத்தடுத்து நடிக்கயிருக்கும் ஹிட்லர், திருடன், நான்-3 படங்களை கூடுதல் பட்ஜெட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.