காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் (நேற்றுடன்) நிறைவடைகின்றது.
இந்தநிலையில் இதன் காலஎல்லையை நீடிக்குமாறு ஆணைக்குழுவால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மே மாதம் 15ம் திகதி வரை ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குணதாஸ தெரிவித்துள்ளார்.