வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் ‘விசாரணை’. தனுஷ் தயாரித்திருந்தார், லைக்கா நிறுவனம் வெளியிட்டிருந்தது. அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தார்கள், ஆந்திரா மாநிலம் குண்டூர் காவல் நிலையத்தில் சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர் அனுபவித்த சித்ரவதைகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
அப்பாவி மக்கள் முதல் மிகப்பெரிய வி.ஐ.பி வரை காவல் நிலையத்துக்குள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அப்படியே பதிவு செய்த படம்.
இந்தப் படத்தை அடையார் இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் உள்ள திரையரங்கில் ஐகோர்ட் நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் பயிற்சி சிவில் நீதிபதிகளும், சட்டம் பயிலும் நிபுணர்களுமாய் சுமார் 30 பேர் நேற்று படம் விசாரணை படத்தை பார்த்தனர்.
படம் பார்த்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார் ஆகியோரை நீதிபதி பி.என்.பிரகாஷ் உள்ளிட்ட நீதிபதிகள் பாராட்டினார்கள்.
நீதிபதிகளும், பயிற்சி நீதிபதிகளும் ஒரு திரைப்படத்தை விரும்பி பார்த்து பாராட்டியது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.