பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குச் சேர்த்து ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

பாடசாலைக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுத்து ஒரு கற்ற பரம்பரையை நாட்டுக்கு வழங்கி சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்கு ஏற்றவகையில் பிள்ளைகளைத் தயார்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்து பாடசாலை முறைமையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

maith

மின்னேரிய தேசிய பாடசாலையின் கனிஷ்ட பிரிவு விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் தொழிநுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றை மாணவர்களிடம் கையளிக்கும் மற்றும் புதிய கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஒரு நாட்டை அபிவிருத்தி செய்யும் போது அது எல்லா பிரதேசங்களையும் தழுவிய ஒரு அபிவிருத்தியாக இருக்க வேண்டுமென்பதோடு, வளங்கள் நியாயமாகப் பகிரப்பட வேண்டுமென்பது புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் போது முன்னுரிமைப்படுத்தல்களை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பது மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமையளிக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிள்ளைகளின் கல்விக்காகச் செய்யப்படும் முதலீடுகள் நீண்டகால முதலீடுகளாகும் என்றும், அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் போது கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய தம்பர அமில தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், வட மத்திய மாகாணசபையின் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான நாலக்க கொலொன்னே, சிட்னி ஜயரத்ன, ஆகியயோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Posts