விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தால், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். இது ஒன்றும் ஆச்சரியமில்லை.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை இதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்.அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருந்தார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.