வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன இதுவரை காலமும் சோமசுந்தரம் அவுனியூவில் ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.