70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மருந்துப்பொருள் இறக்குமதி செய்வதற்கு விலைமனுக் கோரல்கள் உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

செயற்கையாக மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடாக அவசரமாக மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து, தரகுப் பணம் பெற்றுக்கொள்ள சிலர் முயற்சித்து வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Posts