யோசிதவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினரோடு நீதிமன்ற வளாகத்தில் கலகத்தடுப்பு பொலிஸாரும் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட யோசித உட்பட ஐவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Posts