வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்படுகின்றது என கூறப்பட்டால், அவற்றை ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டார்.
மேலும், உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்தானது, மாகாண சபையின் பதிவுப் புத்தகமான கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஊடகங்களில் அவை செய்தியாக வருகின்றன. இதனால் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.
ஆகவே, இச் செயற்பாட்டை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்