நேற்று நடந்த சம்பவம் மகிழ்ச்சி தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை சந்தோசம் சிறிய விடயமாக இருந்தாலும் சிங்கள தமிழ் சகோதரத்துவத்தில் வேறுபாடுகளுக்குள்ளும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது சிங்கள சகோதரர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் நாங்கள் பத்து அடி எடுத்து வைக்க தயாராக இருக்கிறோம் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(5) பௌத்த விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் BBC க்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
දෙමළෙන් ජාතික ගීය ගයනා කිරීම පිලිභදව සතුට පළකිරීමට උතුරේ මහඇමති පළමුවරට යාපනයේ නාගවිහාරයට " සිංහල ජනතාව අපිව බලා අඩියක් ගත්තොතින් දෙමළ ජනතාව අඩි 10ක් අරගෙන ඔගොල්ලන් ඉදිරියට එනවා සහෝදරත්වය වෙනුවෙන්"
Posted by BBC Sinhala – සංදේශය on Friday, 5 February 2016
இதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல என்று தெரிவித்தார்.பலத்த எதிர்ப்புக்களிற்கு மத்தியில் இரண்டாவது தடவையாகவும் இரா.சம்பந்தன் சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.