புகையிலைச் செய்கைக்கு விரைவில் தடை!

புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts