புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவிப் புகையிரதமாக இயங்கியது.
இலங்கையில் உள்ள நீராவிப் புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை 02.02.2016 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தப் புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இன்று நடத்தப்பட்ட புகையிரதத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் பலரும் பயணம் செய்தனர்.ஹட்டன் புகையிரத நிலையத்தில் குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மேற்படி புகையிரதத்தைப் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.