மிரிஹானையில் உள்ள வீட்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முக்கிய பிரபலங்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்தே அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இலங்கையின் நீதித் துறை பலமாகவும் சிக்கலாகவும் உள்ளதாக கூறிய மகிந்த ராஜபக்ஸ முடியுமான வரை மகனின் விடுதலையை துரிதப் படுத்துவது பிரதானம் எனக் கூறியுள்ளார். யோசித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு பலர் வருகை தருவதாகவே அறிய முடிகின்றது.