திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஆறு வயது சிறுவனொருவனின் மர்ம மரணம் அந்தப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோருடன் மீளக் குடியேறியிருந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு மர்ம மரணமடைந்துள்ளான்.
இந்தச் சிறுவனின் சடலம் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை அந்த அந்த பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வழமைபோல் வீட்டிலிருந்து விளையாடச் சென்றிருந்த இந்தச் சிறுவன் இரவாகியும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளுர் மக்களிடம் காணப்பட்ட நிலையில் கிணற்றில் இறங்கி பார்த்தபோது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கல்லோடு கட்டப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட காரணத்தால், இந்த சிறுவனின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
போலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.