Ad Widget

இலங்கை மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை முன்னெடுப்போம் – ஆ.நடராஐன்

இலங்கை மக்கள் எப்போதும் எமது மனதிலும் இடம் பிடித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உதவிகளையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் . அதனால் இலங்கை நாடு எமக்கு அயல் நாடாக தெரியவில்லை. இது எங்களுடைய வீடாகக் காணப் படுகின்றது என யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஐன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

a-nadarajan-india

இந்திய நாட்டின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (26-1-2016)யாழ் .கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள யாழ் இந்தியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் மிகவிமர்சையாக நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும்,இந்தியாவிற்கும் இடையில் ஒரு சிநேகபூர்வமான ஒற்றுமை கடந்த காலங்களில் இருந்து வருகின்றன. அவற்றின் பிரதிபலிப்பின் ஊடாக வடமாகாணம் புத்துயிர் பெற்றுவருகின்றன. இன்றைய காலத்தில் எமது இந்தியா நாடு இலங்கை வாழும் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாகவிருக்கும். அயல் நாடு என்ற நோக்குடன் இருநாடுகளுக்கிடையேயும் காணப்படுகின்ற ஒற்றுமை எமக்குத் தேவையாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஐன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்தியத் தேசியக்கொடியினை ஏற்றி வைபவ ரீதியாக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.இந்திய ஐனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்து செய்தியை யாழ் இந்திய உதவித்துணைத்தூதுவர் ஆ.நடராஐன் வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து தூதரக இந்திய இசைச் சங்கமம் நிகழ்வும், பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

நிகழ்வில் வடமாகாணப் பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,இந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரிகள்,மற்றும் சைவப்பெரியார்கள், சமூகப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts