ஊழியர்கள் மற்றம் தொழிலாளர்கள் மத்தியில் தமது உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விவரங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறிவித்துள்ளது.
இலங்கையின் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பற்றிய தெளிவான விவரங்களை இந்த இணையத்தளம் கொண்டுள்ளதுடன், தொழில் பிரிவுகள் அடிப்படையில் சம்பளங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மற்றும் தொழில் ஆலோசனை போன்ற விவரங்கள் ஆகியவற்றை வழங்கும் வகையில் இந்த இணையத்தளம் அமைந்துள்ளது. இந்த இணையத்தளத்தை Wage Indicator Foundation முன்னெடுத்திருந்தது.
சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இந்த புதிய செயற்பாட்டுக்கு முன்னதாக, தேசிய தொழில் சட்ட விதிமுறைகள் ஆங்கில மொழியில் மட்டுமே காணப்பட்டன. குறிப்பாக இலங்கை தொழில் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடக்கூடியதாக இருந்தது. ஆனாலும், இலங்கையின் இணையப் பாவனை அதிகரித்துச் செல்லும் நிலையிலும், மொபைல் இணைய பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையிலும், Salary.lk இணையத்தளத்தில் இந்த மேலதிக இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் ஊழியர்கள் சட்ட விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வுகள் பாவனையாளர்களுக்கு நட்புறவான வகையில் வழங்கப்பட்டுள்ளன.