முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்று வந்த நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு முன்பாக, இரண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதில், கோப்பாப்புலவு பகுதியைச் சேர்ந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தங்கள் வயல் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, கொக்குத்தொடுவாயை பகுதி மக்கள், முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளர் இராஜரட்ணம் விஜயகுமாரை இடமாற்றம் செய்யவேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைவர்களாக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்ன pமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.காதர் மஸ்தான் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.