முதலாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வி!

இலங்கையின் பாடசாலைகளில் முதலாம் வகுப்பில் இருந்து பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.

தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா இந்த தகவலை, ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது மற்றும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது என்பன கடும் பிரயத்தனமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் இந்த விடயத்தில் நட்புரீதியான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பாலேந்திரா தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நட்டாஸா பாலேந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அதிகாரசபை, திட்டத்தை முன்னெடுப்பதற்காக சுமார் 2000 பாடசாலை பாதுகாப்பு குழுக்களை அமைத்துள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts