இலங்கையில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை செய்வது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால கூறினார்.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக கடத்தல் சம்பந்தமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 06 வைத்தியர்கள் சம்பந்தமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அந்த விசாரணைகளின் முடிவில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.