சில ஊடகங்களின் நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சில ஊடகங்கள் வேண்டுமென்றே அணியின் வீரர்கள் மீது சேறு பூசியிருந்தன.
ஆட்ட நிர்ணய சதி குறித்து நடைபெறும் விசாரணைகளை பயன்படுத்தி வீரர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். எனினும் விளையாட்டை தூய்மையாக வைத்திருக்க விளையாட்டுத்துறை அமைச்சர், பொலிஸ் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கட் ஆகியனவற்றுக்கு நன்றி பாராட்ட வேண்டும்.
இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி சில ஊடகங்கள் வீரர்களை இழிவுபடுத்தியும் அவர்களுக்கு எதிராக சேறு பூசும் வகையிலும் சில ஊடகங்களும் இணைய தளங்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.
நாம் கிரிக்கட்டை நேசிக்கின்றோம். கிரிக்கட்டை தூய்மையாக வைத்திருக்வே நாம் முயற்சிக்கின்றோம்.
இலங்கை அணியின் வீராகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவில்லை. ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு வீரர்களை தூண்ட முயற்சித்தவர்கள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுகின்றது என அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகவியலாளாகளிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.