சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதன் பயன் இந்நாட்டு மக்களுக்கு எப்போது கிடைக்கும் என்பதில் தொடர்ந்து சிக்கல் காண்படுகின்றது.
தற்போதைய சர்வதேச விலைகளுக்கமைய பெட்ரோல் ஒரு லீற்றர் 90 ரூபாய்களுக்கும் டீசல் ஒரு லீற்றர் 70 ரூபாய்கள் வரையும் குறைக்கமுடியும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
பிரதானமாக கச்சா எண்ணையின் வழங்கல் அதிகரித்துள்ளமையினால் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் சிரிமல் அபேரத்தன தெரிவித்திருந்தார்.
நேற்றைய நாள் வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் குழல் ஒன்றின் குறைந்த பெறுமதியாக அமெரிக்க டொலர் 29.42 ஆக பதிவாகியிருந்தது.
எனினும் கடந்த வருடம் ஜனவரி 21ம் திகதி தீர்மானிக்கப்பட்ட எரிபொருள் விலைகளுடன் ஒப்பிடும் போது கச்சா எண்ணை குழல் ஒன்றின் விலை 55.47 அமெரிக்க டொலர்களாகும்.