பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!!

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்..

நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன் செயற்படுமாறு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரும் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட மற்றும் வயது முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசௌகரியப்படும் வகையில் நடந்து கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டில் மிகவும் வயது முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கைகளை அடிக்கடி பிடித்து வாழ்த்து சொல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை காணும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வயது முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கைகளைப் பிடித்து வாழ்த்துச் சொல்லி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களினால் இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடல் உறுப்புக்கள் பற்றி ஆபாசமாக கேலி கிண்டல் செய்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

75 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் வைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்துள்ளதாகவும் அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்திரமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் வயது முதிர்ந்தவர்களின் சில்மிசங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்தள்ளது.

Related Posts