2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன.
கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும் பதிவாகியிருந்தன.
பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 65.23 ஆகும்.
பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 66.32 ஆகும்.
மாகாண மட்டத்தில் சபரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்கள் முறையே 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.
மாவட்ட மட்டத்தில் இரத்தினபுரி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் 2ம், 3ம், 4ம் மற்றும் 5ம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.