பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என, அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளாக செய்திகள் வௌியாகின.
எனினும் கோதுமை மாவுக்கான விலையை அதிகரிக்க எவருக்கும் அனுமதியளிக்கவில்லை என சுட்டிக்காட்டிய நுகர்வோர் அதிகார சபை, ஒருகிலோ கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டுள்ள 87 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியது.