தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஆகியோரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்த முயன்றவர்களை கைது செய்து சதிதிட்ட பின்னணி குறித்து வெளிப்படுத்துமாறு நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடரின் போது குறித்த வீரர்கள் இருவரையும் ஆட்ட நிர்ணயத்துக்குட்படுத்த முகவர் ஒருவர் முயற்சித்
ததாகவும் அவர் இலங்கை கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பை பேணுவதாகவும் அவர்கள் தொடர்பில் உடன் விசாரணை ஆரம்பிக்குமாறும் அமைச்சரின் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மேற்கிந்திய தீவுகள் தொடரின் போது ஆட்ட நிர்ணய முகவர்கள் தம்மை அனுகியமை தொடர்பில் குறித்த இரு வீரர்களும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அமைச்சரின் முறைப்பாடு தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் கீழ் ஆராயப்பட்டு வருகின்றது.