இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும் வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியில் 233 ஏக்கர் காணிகளும் இராணுவத்தினரால் செவ்வாய்க்கிழமை (29) திடீரென விடுவிக்கப்பட்டன.
இதனையடுத்து, நேற்று புதன்கிழமை, மக்கள் மிக ஆர்வமாக அந்த இடங்களைப் பார்வையிடச் சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் மக்கள் தங்கள் காணிகளில் சில இடங்களில் மிதிவெடி அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தல் உள்ளதை அவதானித்துள்ளனர்.
இங்கு மிதிவெடிகள் முற்றாக அகற்றப்படவில்லையா என அங்கிருந்த இராணுவத்தினரிடம் வினவியபோது, உயர் அதிகாரிகளுடன் கதைத்துத் தான் கூற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.