Ad Widget

நாளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு!

நாளை (30)தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் சந்திக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கூட்டமைப்பு தரப்பில் அதன் தலைவர் சம்பந்தன் , மாவை சேனாதிராஜா , சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என கூட்டமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை கிடைத்த செய்திகளின் படி கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் ,ஈபிஆர் எல் எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் இடம்பெறவி்ல்லை.

முன்னதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இணைத்தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவையில் புளொட் ,ஈ பி ஆர் எல் எப் கட்சிகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ் மக்கள் பேரவை தீர்வு திட்டம் தொடர்பில் முன்மொழிவுக்காக அரசியல் உபகுழு ஒன்றினை நியமித்துள்ளமையும் நோக்கத்தக்கது.  இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுவது  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் சிவில் அமைப்புக்களையும் மக்களையும் சந்திப்பதில் கூடிய ஆர்வம் காட்டிவருகின்றமை அவதானிக்ககூடியதாக உள்ளது.

Related Posts