பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை

இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்காதிருக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

சில மணி நேரங்களுக்கு மட்டும் இடம்பெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எமது இளம் யுவதிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற இதுபோன்ற இசைக் கச்சேரி ஒன்றில், பற்றுச்சீட்டுக்களின் பெறுமதிக்கேற்றவாறு வழங்கப்படுகின்ற மது, பியர், விஸ்கி போன்றவற்றை அருந்திவிட்டு எமது இளைஞர் யுவதிகள் மயங்கிக் கிடந்ததை ஊடகங்கள் மூலமாக காண முடிந்ததாக ஜனாதிபதி கூறினார்.

அத்தோடு பெண்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்வதுடன், அவர்களின் மார்புக் கச்சைகளை கழற்றி பாடகர் மீது வீசி சந்தோஷப்படக்கூடிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுபோன்ற அநாகரீகமான இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று அரச அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related Posts