Ad Widget

தேசிய_பாதுகாப்பு‬ அச்சுறுத்தல் என கூறுபவர்கள் . வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கலாம் வாகன உதவி செய்து தருகிறேன் ! ஜனாதிபதி அறைகூவல்

அரச நத்தார் கொண்டாட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (20) பிற்பகல் யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்.

அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கையை புத்திஜீவிகள் புரிந்து கொண்டுள்ளனர். மக்களும் புரிந்துகொண்டுள்ளனர். புரிந்துகொள்ள முடியா சில அடிப்படைவாதிகள் கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி எதுவேணுமென்றாலும் விமர்சனங்களை முன்வைக்கலாம் பாராளுமன்றம் மாகாணசபைகளில் எங்கும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும்.

சுதந்திரத்தை தேசிய நல்லிணக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் ஆனால் அடிப்படை வாதிகள் சிலர் இந்த அரசாங்கம் பதவி ஏற்றதும்
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர் ஆனால் எமது ஆட்சியில் நாட்டில் தேசிய பாதுகாப்பு வலுவடைந்துள்ளது.

மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கமாட்டோம் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற எமது அரசாங்கம் இடமளிப்பதாக கூறுபவர்களுக்கு நான் அழைப்பொன்றை விடுக்கின்றேன்

1618629_1483900871637504_7775575398695947895_n

குறிப்பாக வடக்கிற்கு வந்து மக்களை சந்திக்கவும் அவர்கள் கொழும்பில் இருந்து வடக்கிற்கு வர என்னால் வாகனம் வழங்க முடியும் கடல் மூலம் வருவதாயின் கப்பலொன்றை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும் விமானம் வேண்டுமென்றால் அதையும் ஏற்பாடு செய்துகொடுக்க முடியும். இனவாதிகளுக்கு நான் ஒன்றை சொல்கிறேன். இங்கு வந்து பாருங்கள். தேசிய பாதுகாப்பு பிரச்சனை எங்கே இருக்கிறது என்று. பொய்க்கு கத்தாமல் பிரச்சனையை விளங்கிக் கத்துங்கள்.

25 வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களை சந்தித்துள்ளேன் அவர்களுக்கு தெரியாமலேயே அங்கு சென்றேன். தேசிய பாதுகாப்புக்கு தொடர்பான பிரச்சனை 25 வருடமாக இடம்பெயர்ந்துள்ள தங்களை மீளக்குடியமர்த்துமாறு கூறினர்.

இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் அதற்கு செயலணி ஒன்றை உருவாக்கவுள்ளோம். தேசிய பாதுகாப்பை காட்டி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இப்படி சதிகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நானும் பிரதமரும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Posts