வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வடக்கில் இராணுவத்தினரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி தமது தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதனால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மீள்குடியேற்றபடாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.