மாணவியை மோதிக் கொன்ற கடற்படைச் சாரதிக்கு பிணை!

வேலணையில் பாடசாலை மாணவியை மோதிக் கொன்ற கடற்படையினரின் வாகனச்சாரதியை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெலின்குமார் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவான் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி வேலணைப் பகுதியில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்படையினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த நாரந்தனைப் பகுதியைச் சேர்ந்த உசாந்தி உதயகுமார் (வயது 15) என்ற சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்திருந்தார்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கடற்படைச் சாரதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தக் கூடாது என்ற இராணுவப் புலனாய்வாளர்கள் சிறுமியின் குடும்பத்தினரை அச்சுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts