வேலை நிறுத்த முடிவை முக்கிய தொழிற்சங்கங்கள் கைவிட்டன

நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காமையால், அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனை அறிவித்தனர்.

இந்தநிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் குறித்த திட்டத்தை கைவிட்டுள்ளன.

மேலும் அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கமும் வேலை நிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் வங்கி சேவைகள் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts