தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ காரணமாக இருக்கலாம். இந்தியாவில் நிகழும் வானிலை மாற்றங்களுக்கு எல்-நினோவுக்கும் பங்குண்டு.
கிழக்குப் பசுபிக் கடற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு எல்-நினோ என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், எல்-நினோவுக்கும் சென்னை வெள்ளத்துக்கும் நேரடி தொடர்பா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அளவுக்கு அதிகமான மழைப் பொழிவு என்பது பெப்ரவரி மாதம் வரை தென்னிந்தியா, இலங்கை, மாலைதீவு உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் என்றும், அதே சமயம் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.