உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது வரைக்காலமும், உயர் தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்றவர்களே மருத்துவ துறைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
எனினும், இனிவரும் காலத்தில் உயர்தரத்தில் எந்த துறையில் கல்வி கற்றாலும், அவர்களுக்கு மருத்துவ துறையில் 6 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அந்த துறையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.