வடமாகாண சபையில் ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும், வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்திய வடமாகாண சபை உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

தேநீர் இடைவேளையையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராணுவ வெளியேற்றம், மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.

Related Posts