இனி ரயில்களில் டிக்கட் இன்றி பயணித்தால்…?

ரயில்களில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்படுவதோடு, கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்படும் எனவும், போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்பவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts