பொலித்தீன் பாவனை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே அதனை அமுலாக்க ஜனவரி முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பொலித்தீனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts