தமிழகத்தின் புதுக்கோட்டை அருகேயுள்ள தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாம் சார்பில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி மணிகளை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.
சென்னையில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிவாரண உதவி செய்ய வேண்டுமென முகாம் மக்கள் நலக்குழுத் தலைவர் ச.கமலநாதன், நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர் மன்றம், விளையாட்டுக்குழு, முகாம் வாசிகள் ஆகியோர் தீர்மானத்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 5ம் திகதி முதல் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று அணுகியதில், 500 புது போர்வைகளும், 350 கைலிகள், 300 வேஷ்டிகள், 224 சட்டைகள், பனியன், டி சர்ட் ஆகிய துணிமணிகள் அளித்தனர்.
சேகரிக்கப்பட்டன இந்த பொருட்களை திங்கட்கிழமை காலை பார்சல் செய்து, மாலையில் கெட்டுப்போகாத உணவு வகைகளையும் தயாரித்து சென்னைக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர் என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவ வடமாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி உதவிகளை வழங்க விரும்புவோருக்காக வங்கிக் கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அல்லது வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நேரடியாக பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதியுதவி வழங்க முன்வந்தவர்களை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் துாதுவரிடம் கையளிக்கப்படும் எனவும், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.