சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மக்களுக்கு தௌிவூட்டும் வேவைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஷேடமாக வடக்கிலுள்ள மக்கள் இலஞ்சம் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயக்கம் காட்டுவதாக கூறிய ஆணைக்குழு, அவர்கள் இது குறித்து சரியான புரிந்துணர்வு இன்றி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் 1954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் விரைவில் இணையத்தின் மூலம் முறைப்பாடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அந்த ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.