புகழ்பெற்ற இசைக் கலைஞரான பண்டித் அமரதேவவின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ‘சரச வாசன துரு’ இசை நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
உலகலாவிய ரீதியில் மிகவும் அறியப்பட்ட இலங்கையினுடைய புகழ்பெற்ற இசைக்கலைஞரான பண்டித் அமரதேவ இசையால் எல்லோரினதும் இதயங்களை தொட்டவராவார். அவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களால் மட்டுமல்ல எதிர்கால சந்ததியாலும் கௌரவிக்கப்படுவார் என்று ஜனாதிபதி இங்கு உரையாற்றும்போது தெரிவித்தார்.
இதேவேளை, பண்டித் அமரதேவவுடன் இணைந்து ஜனாதிபதி சில பாடல்களையும் இங்கு பாடினார். விசேட நிகழ்ச்சித்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்