தமிழக கடலோர, தெற்கு உள்மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்யும் என்று கூறினார்.
மேலும், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது கன்னியாகுமரிக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்தாகக் கூறியுள்ளார்.
வட கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென் கடலோர மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.