தகவல் அறியும் உரிமை ,வாகன அனுமதி சலுகைகளுக்கு அனுமதி

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் இது, அதிகபட்சம் இரண்டு வாகனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தகவல் அறியும் உரிமை சட்டமூலத்துக்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை ஊடகத்துறை அமைச்சர், கயந்த கருணாதிலக்க சமர்ப்பித்திருந்தார்.

Related Posts