பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும், எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை வவுச்சர்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலவசகல்வியை பலப்படுத்துவதிலும் கல்வித் தரத்தினை உயர்த்துவதிலும் இவ் அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையிலேயே இவ்வாறாக சீருடைகளுக்கான வவுச்சர் வழங்கி வைக்கும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மேலும் கருத்து தெரிவித்த அவர், பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமிடத்து 1919 இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பினை ஏற்படுத்தி முறையிடலாம் எனவும் தெரிவித்தார்.
கல்வியமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அரசாங்க பாடசாலை மாணவர்கள், பிக்கு மாணவர்கள், என அனைவருக்கும் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதுடன் 450 ரூபா முதல் 1700 ரூபா பெறுமதி வரையிலான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.